வாழை மரங்கள் நிறைந்த தலமாக இருந்ததால் 'பைஞ்ஞீலி' என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வகை வாழை. இத்தலத்து மூலவர் 'நீலகண்டர்' என்றும் அம்பிகை 'விசாலாட்சியம்மை' என்றும் வணங்கப்படுகின்றனர்.
இத்தலத்தில் கல் வாழை மரம் ஒன்று உள்ளது. திருமணத் தடை உள்ள ஆண், பெண் இருபாலரும் இத்தலத்திற்கு வந்து இந்த கல்வாழைக்கு பூசை செய்தால் தடை நீங்கும்.
திருநாவுக்கரசர் இத்தலத்திற்கு வருகை தந்தபோது அவருக்கு பசியெடுக்க, இறைவன் பந்தல் அமைத்து கட்டமுது கொடுத்த தலம். இந்நிகழவு சித்திரை மாதத்தில் உற்சவமாக நடைபெறுகிறது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|